ஜல்சக்தி அமைச்சகம்
ஆறுகளில் தண்ணீர் அளவு
Posted On:
07 APR 2022 5:25PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் டுடு கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என இருவகை ஆறுகள் நாட்டில் உள்ளன. வற்றாத ஆறுகளில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும், அதே சமயம் வற்றும் ஆறுகள் மழைக்கால ஆறுகள் ஆகும், இவற்றில் பெரும்பாலும் மழை காலத்தில் மட்டுமே தண்ணீர் பாய்கிறது.
ஆறுகளின் ஓட்டம் என்பது ஒரு மாறும் அளவுரு ஆகும். மழைப்பொழிவு, அதன் விநியோக முறை, நீர்ப்பிடிப்பில் கால அளவு மற்றும் தீவிரம், நீர்ப்பிடிப்புப் பகுதியின் ஆரோக்கியம், தாவரங்கள் மற்றும் நீர் வெளியேற்றம்/பயன்பாடு போன்ற பல துணை அளவுருக்களைப் பொறுத்து இது உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் நீரியல் கண்காணிப்பை மத்திய நீர்வள ஆணையம் மேற்கொள்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக 13 ஆறுகளின் சராசரி ஓட்டம் எந்த பெரிய அதிகரிப்பு அல்லது குறையும் போக்குகளைக் கொண்டிருக்கவில்லை.
"விண்வெளி உள்ளீடுகளைப் பயன்படுத்தி இந்தியாவில் நீர் கிடைப்பதை மறு மதிப்பீடு செய்தல்" என்ற ஆய்வு 2019-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்படி, நாட்டின் 20 படுகைகளின் சராசரி ஆண்டு நீர் வளம் 1999.20 பில்லியன் கன மீட்டர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு பிராந்தியம் அல்லது நாட்டின் சராசரி வருடாந்திர நீர் இருப்பு பெரும்பாலும் நீர்-வானிலை மற்றும் புவியியல் காரணிகளைச் சார்ந்துள்ளது. இருப்பினும், ஒரு நபருக்கு நீர் கிடைப்பது நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்தது என்பதால் மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக தனிநபர் நீர் இருப்பு குறைந்து வருகிறது.
நீர் மாநிலப் பிரிவில் வருவதால், நீர்வளத்தைப் பெருக்குதல், பாதுகாத்தல் மற்றும் திறமையான மேலாண்மைக்கான நடவடிக்கைகள் முதன்மையாக அந்தந்த மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு துணையாக, பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814505
***************
(Release ID: 1814596)