வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 50 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது
அரிசி, கோதுமை, சர்க்கரை, இதர தானியங்கள் மற்றும் இறைச்சி போன்ற முக்கியப் பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதி 2020-21-ம் ஆண்டில் 568 மில்லியன் டாலரில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 2.12 பில்லியன் டாலரை எட்டியது.
கோவிட்-19 தொற்று காரணமாக வேளாண் பொருட்களுக்கான தேவை அதிகரித்து, அவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது
ரஷ்யா-உக்ரைன் போரால் எழுந்துள்ள தற்போதைய நெருக்கடியான சூழலிலும், கோதுமை மற்றும் பிற உணவு தானியங்களின் விநியோகத்திற்காக உலகமே இந்தியாவை எதிர்பார்க்கிறது.
உத்வேகத்தை தொடரும் முயற்சிகளை வர்த்தகத் துறை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது
Posted On:
06 APR 2022 2:47PM by PIB Chennai
2021-22 -ம் ஆண்டிற்கான வேளாண் பொருட்களின் ஏற்றுமதி (கடல் மற்றும் தோட்டப் பொருட்கள் உட்பட) 50 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளது. இது வேளாண் ஏற்றுமதியில் இதுவரை எட்டப்படாத அதிகபட்ச அளவாகும். வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2021-22-ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 19.92% அதிகரித்து 50.21 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான கட்டண அதிகரிப்பு, கொள்கலன் பற்றாக்குறை போன்ற எதிர்பாராத சவால்கள் இருந்தபோதிலும், 2020-21-ம் ஆண்டில் எட்டப்பட்ட 17.66% வளர்ச்சியைக் காட்டிலும் அதிகரித்து, 41.87 பில்லியன் டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சாதனை பெரிதும் உதவிடும்.
அரிசி (USD 9.65 பில்லியன்), கோதுமை (USD 2.19 பில்லியன்), சர்க்கரை (USD (USD 4.6 பில்லியன்) மற்றும் பிற தானியங்கள் (USD 1.08 பில்லியன்) போன்ற முக்கியப் பொருட்களுக்கு இதுவரை இல்லாத வகையில் அதிக ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதி 273%க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது 2020-21-ல் இருந்த $568 மில்லியனிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்து 2021-22-ல் $2119 மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளித்துள்ளது. மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்றவை. அரிசிக்கான உலகச் சந்தையில் கிட்டத்தட்ட 50% -த்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி, 7.71 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும். இதன் மூலம் மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய கடலோர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர். மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 4 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மிகப்பெரிய அளவில் விநியோகப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், காபி ஏற்றுமதி முதல்முறையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள காபி விவசாயிகளை பயனடையச் செய்துள்ளது.
வணிகத் துறை மற்றும் அதன் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு முகவர்களான வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்களின் மேம்பாட்டு ஆணையம் APEDA, கடல்சார் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் MPEDA மற்றும் பல்வேறு சரக்கு வாரியங்கள் ஆகியவற்றின் தொடர் முயற்சிகளின் விளைவாக இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களை ஈடுபடுத்த இத்துறை சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதியால் விவசாயிகள் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக, வர்த்தகத் துறை, விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு நேரடி ஏற்றுமதி சந்தை இணைப்பை வழங்க சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814057
***************
(Release ID: 1814243)
Visitor Counter : 538