சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாட்டில் பசுமை நெடுஞ்சாலைகளின் நிலை
Posted On:
06 APR 2022 3:09PM by PIB Chennai
நாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பசுமைவழி நெடுஞ்சாலைகள் (1,63,350 கோடி ரூபாய் செலவில் 2,485 கிமீ நீளம் கொண்ட 5 விரைவுச்சாலைகள் மற்றும் 1,92,876 கோடி ரூபாய் செலவில் 5,816 கிமீ நீளம் கொண்ட 17 அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலைகள்) என மொத்தம் 22 நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தில்லி - மும்பை விரைவுச் சாலையின் மூன்று பிரிவுகளான தில்லி - தௌசா - லால்சோட் (ஜெய்ப்பூர்) (214 கி.மீ.), வதோதரா - அங்கெல்ஸ்வர் (100 கி.மீ.) மற்றும் கோட்டா - ரத்லாம் ஜபுவா (245 கி.மீ.) ஆகிய சாலைகள் அமைக்கும் பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 22 பசுமை நெடுஞ்சாலைகளின் விவரங்கள் பின்வருமாறு:
மொத்தமுள்ள 8,301 கிமீ தொலைவிற்கான சாலைகள் அமைக்கும் பணிகளில், 4,946 கிமீ தொலைவிற்கான பணிகள் அனுமதி வழங்கப்பட்ட நிலை (நியமிக்கப்பட்ட தேதி அறிவிக்கப்படவில்லை), ஏல நிலை மற்றும் விரிவான திட்ட அறிக்கை நிலை என வெவ்வேறு நிலைகளில் உள்ளது.
பணிகளுக்கான உடனடி குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிரந்தர திருத்தத்திற்கான நீண்ட கால நடவடிக்கைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நிலுவையில் உள்ள பணிகள் மீதான அனைத்து குறுகிய கால நடவடிக்கைகளும், 3385 பணிகள் மீதான நீண்ட கால நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாநில பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள தேசிய நெடுஞசாலைப் பிரிவுகள், இந்திய தேசிய நெடுஞசாலை ஆணையம் NHAI, தேசிய நெடுஞசாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் NHIDCL போன்ற முகமைகள் மூலம் அமைச்சகம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
i) அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் அனைத்து நிலை (வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாடு) சாலை பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்வது
ii) தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளின் அணுகுமுறைகளில் ரம்பிள் கீற்றுகள் அல்லது பட்டை அடையாளங்களை வழங்குதல்;
iii) தேசிய நெடுஞ்சாலை தொடரமைப்பின் விரும்பிய இடங்களில் வேக வரம்பு அடையாளங்களை வழங்குதல்;
iv) பக்கச் சாலைகளில் வேகத் தடை மற்றும் தொடர்புடைய பலகைகளை வழங்குதல்;
v) IRC இன் படி போக்குவரத்துக்கு சந்திப்பில் ஆம்பர் பீக்கான்களை வழங்குதல்;
vi) உயரமான கரைகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் விபத்து தடுப்புகளை நிறுவுதல்;
vii) சாலை பாதுகாப்பு தணிக்கையில் சான்றிதழ் படிப்புக்கு பொறியாளர்களை ஊக்குவித்தல், இதற்காக இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்ப கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
viii) பிளாக் ஸ்பாட் மேலாண்மை தகவல் முறைகளுக்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து கரும்புள்ளிகள், ஐடிகள், புகைப்படங்கள் மற்றும் சரிசெய்தல் நிலை போன்ற தகவல்கள் உரிய திருத்தத்திற்குப் பின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு அவைகள் கண்காணிக்கப்படும்.
இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814063
***************
(Release ID: 1814177)