அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்பத் துறைகளில் ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 APR 2022 3:12PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
தொழில்நுட்பத் துறைகளில் ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. புதுமை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோரை வளர்ப்பதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன, வளம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை இது உருவாக்குகிறது.
புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அறிவு சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான யோசனைகளை வெற்றிகரமான ஸ்டார்ட் அப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சி திட்டம் 2016-17-ல் தொடங்கப்பட்டது.
தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களை சிஎஸ்ஐஆர் அமைத்துள்ளது.
உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவிக் குழு மூலம் இத்துறையில் ஸ்டார்ட்அப்களை உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரிக்கிறது. நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் 60 வழிகாட்டு மையங்களுக்கு இக்குழு ஆதரவளித்து, 1500-க்கும் மேலானோர் பயனாளிகளாக உள்ளனர்.
பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதற்காக அடல் இன்குபேஷன் சென்டர்களை (ஏஐசி) அடல் இன்னோவேஷன் மிஷன் அமைத்துள்ளதோடு, அடல் நியூ இந்தியா சேலஞ்ச் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814071
***************
(Release ID: 1814174)
Visitor Counter : 160