மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு பொருட்களின் ஏற்றுமதி
Posted On:
06 APR 2022 1:40PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
தற்சார்பு இந்தியா பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மின்னணு சாதனங்களுக்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்திய அரசின் குறிக்கோள் ஆகும்.
இது தொடர்பாக, நமது மின்னணு உற்பத்தி சூழலியல் அமைப்பை அரசு விரிவுபடுத்தி மற்றும் ஆழப்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விவரங்கள் பின்வருமாறு:
2016-17-ல் ரூ 3,17,331 கோடியாக இருந்த மின்னனு சாதனங்களின் உற்பத்தி மதிப்பு, 2017-18-ல் ரூ 3,88,306 கோடியாகவும், 2018-19-ல் ரூ 4,58,006 கோடியாகவும், 2019-20-ல் ரூ 5,33,550 கோடியாகவும், 2020-21-ல் ரூ 5,54,461 கோடியாகவும் இருந்தது. ஆதாரம்: வர்த்தக நுண்ணறிவு மற்றும் புள்ளியல் தலைமை இயக்குநரகம்.
2016-17-ல் ரூ 39.980 கோடியாக இருந்த மின்னனு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு, 2017-18-ல் ரூ 41,220 கோடியாகவும், 2018-19-ல் ரூ 61,908 கோடியாகவும், 2019-20-ல் ரூ 82,936 கோடியாகவும், 2020-21-ல் ரூ 81,948 கோடியாகவும் இருந்தது. ஆதாரம்: மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை.
மின்னணு சாதனங்களுக்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814031
***************
(Release ID: 1814076)
Visitor Counter : 301