புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமயமலை பனிப்பாறைகள் உருகுதல் குறித்து அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம்

Posted On: 06 APR 2022 12:36PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

இந்திய இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசு அது குறித்த தரவுகளை பராமரித்து வருகிறது.

இந்திய புவிவியல் ஆய்வு நிறுவனம், வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம், தேசிய ஹைட்ராலஜி நிறுவனம், விண்வெளி பயன்பாட்டு மையம், இந்திய அறிவியல் கழகம் போன்ற பல இந்திய அமைப்புகள் பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளுக்காக இமயமலை பனிப்பாறைகளைக் கண்காணித்து, இமயமலை பனிப்பாறைகளில் ஏற்பட்டுள்ள பன்முக இழப்பு குறித்து தகவலளித்துள்ளன.

மேற்கு இமயமலையில் உள்ள சந்திரா படுகையில் (2437கிமீ2 பரப்பளவு) ஆறு பனிப்பாறைகளை துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மூலம் 2013 முதல் புவி அறிவியல் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. அதிநவீன கள ஆய்வு நிலையம் 'ஹிமான்ஷ்' சந்திரா படுகையில் நிறுவப்பட்டு, பனிப்பாறைகள் குறித்த கள  ஆய்வை நடத்துவதற்காக 2016 முதல் செயல்படுகிறது.

ஒன்பது பனிப்பாறைகளில் நிறை சமநிலையை மதிப்பிடுவதன் மூலம் பனிப்பாறைகள் உருகுவது பற்றிய ஆய்வுகளை இந்திய புவிவியல் ஆய்வு நிறுவனம் நடத்தியதோடு, இமயமலைப் பகுதியில் உள்ள 76 பனிப்பாறைகளின் மந்தநிலை/ முன்னேற்றத்தையும் கண்காணித்துள்ளது. இமயமலை பனிப்பாறைகளில் பெரும்பாலானவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விகிதங்களில் உருகுவது/ பின்வாங்குவது கவனிக்கப்படுகிறது.

இமயமலை பனிப்பாறைகள் பற்றிய ஆய்வுக்கான பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரித்துள்ளது. உருகும் பனிப்பாறைகள் இமயமலை நதிகளின் நீர் ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813988  

***************


(Release ID: 1814048) Visitor Counter : 306


Read this release in: English , Urdu , Hindi , Bengali