புவி அறிவியல் அமைச்சகம்
மின்னல் பற்றி எச்சரிக்கை செய்ய டாமினி செயலி
Posted On:
06 APR 2022 12:41PM by PIB Chennai
வானிலையோடு தொடர்புடைய இடி-மின்னல் பற்றிய முன்னெச்சரிக்கைகளை ஐந்து நாட்களுக்கு முன்னதாக இந்திய வானிலை ஆய்வுத்துறையின் மூலம் புவி அறிவியல் அமைச்சகம் வெளியிடுகிறது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி அமைப்பாக புனேயில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது மின்னல் தாக்கும் இடங்களை மிகவும் துல்லியமாக கண்டறிய நாட்டில் 83 இடங்களில் மின்னல் தாக்கும் இடங்களை கண்டறியும் மையங்களை அமைத்துள்ளது. இதன் பயனாக இந்த வலைப்பின்னலில் இருந்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் பல்வேறு மாநில அரசுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.
2020-ல் டாமினி மின்னல் செயலிகளை புனே ஐஐடிஎம் உருவாக்கியது. இந்த செயலி இந்தியா முழுவதுமான மின்னல் பற்றிய தகவல்களை கண்காணித்து 20 கி.மீ. மற்றும் 40 கி.மீ. சுற்று வட்டாரத்தில் ஜிபிஎஸ் அறிவிப்புடன் மின்னல் பற்றிய எச்சரிக்கையை வெளியிடுகிறது. அடுத்த 40 நிமிடங்களில் மின்னல் உருவாகும் இடம் பற்றிய எச்சரிக்கையையும் அது அளிக்கிறது. இந்த செயலியை இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த தகவலை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புவி அறிவியல் துறைக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813993
***************
(Release ID: 1814047)