ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை இணைப்பு வசதிகள்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்கள்

Posted On: 05 APR 2022 5:28PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022 வரை நாடு முழுவதும் 788185 கி.மீ. சாலைகள் மற்றும் 9509 பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 701205 கி.மீ. சாலைகள் மற்றும் 6852 பாலங்கள் நிறைவு செய்யப்பட்டு, 71172 கி.மீ. சாலைகள் மற்றும் 2657 பாலங்கள் நிலுவையில் உள்ளன.

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 619.14 கோடியும், 2019-20-ல் ரூ 308.46 கோடியும், 2020-21-ல் ரூ 265.38 கோடியும், 2021-22-ல் ரூ 440.00 கோடியும் மத்திய நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813768

 

*******



(Release ID: 1813840) Visitor Counter : 384


Read this release in: Telugu , English , Urdu , Manipuri