இந்திய போட்டிகள் ஆணையம்
இந்திய ரயில்வே டெண்டர்களில் முறைகேடு செய்த நிறுவனங்களுக்கு சிசிஐ அபராதம் விதித்துள்ளது
Posted On:
05 APR 2022 12:43PM by PIB Chennai
வணிகப் போட்டி சட்டம் 2002-ல் பல்வேறு பிரிவுகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 11 நிறுவனங்கள் மீது இந்திய வணிகப் போட்டி ஆணையம் சிசிஐ இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு, மேற்கு ரயில்வேயின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேக்கு உயர்திறன் பாலிமைடு புஷ்கள், சுய உயவு பாலியஸ்டர் ரெசின் புஷ்கள் ஆகியவற்றை சப்ளை செய்வதில் இந்த நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலைகளை நிர்ணயிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டது சிசிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு இடையில் செயலிகளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்கள் இவற்றுக்கு ஆதாரமாக கொள்ளப்பட்டது.
முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களின் வருமான அடிப்படையில் சராசரியாக 5 சதவீதத்தை அபராதமாக சிசிஐ விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சிசிஐ-யின் www.cci.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813570
***************
(Release ID: 1813630)