சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பாலைவனமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
Posted On:
04 APR 2022 3:36PM by PIB Chennai
பாலைவனமாதலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது, அவற்றுக்கு இடையேயானவை:
i) மக்கள் பங்கேற்பின் மூலம் சீரழிந்து வரும் காடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக, தேசிய காடு வளர்ப்பு திட்டத்தை (NAP) தேசிய காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம் (NAEB), செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில் மாநில வன மேம்பாட்டு நிறுவனம் (SFDA), வனப் பிரிவு மட்டத்தில் வன மேம்பாட்டு நிறுவனம் (FDA) மற்றும் கிராம அளவில் கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் (JFMCs) ஆகியவற்றின் வாயிலாக 3 அடுக்கு நிறுவன அமைப்பு மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2018-21 ஆம் ஆண்டில் 37110 ஹெக்டேர் பரப்பளவைக் கையாளுவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 157.78 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் விடுவிக்கப்பட்ட நிதி தொடர்பான மாநில வாரியான விவரங்கள் முறையே இணைப்பு I மற்றும் II இல் உள்ளன.
ii) பசுமை இந்தியாவிற்கான தேசிய இயக்கம் (ஜிஐஎம்) காடு மற்றும் காடு அல்லாத பகுதிகளில் மரம் நடும் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வனப்பகுதியை பாதுகாத்தல், மீட்டெடுத்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16-ம் நிதியாண்டில் இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. 117503 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டங்களை உருவாக்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மிசோரம், ஒடிசா, பஞ்சாப், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு ஆகிய பதினைந்து மாநிலங்களுக்கு 594.28 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2018-19 முதல் 2020-21 வரை), 298.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது, இதில் 233.44 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
iii) இமயமலை குறித்த ஆய்வு பணிகளுக்கான தேசிய இயக்கத்தின் (NMHS) திட்டங்கள் சார்ந்த செயலாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில திட்டங்களில் நிலச் சீரமைப்பு, மண் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மேலாண்மை போன்றவற்றுக்கான மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இமயமலை குறித்த ஆய்வு பணிகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் 10.84 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, முழுத் தொகையும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2018-19 முதல் 2020-21 வரை) பயன்படுத்தப்பட்டது. விவரம் இணைப்பு III இல் உள்ளது.
iv) ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டம் (IWMP) மானாவாரி மற்றும் பாழடைந்த நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சிறந்த தாங்குதிறனுடன் கூடிய நிலையான மேம்பாடு மற்றும் மேம்பட்ட இயற்கை வள மேலாண்மை அறிவை உறுதி செய்வதற்கான தலையீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கிடையே, மேட்டு பகுதி மேம்பாடு , வடிகால் பாதை சுத்திகரிப்பு, மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நாற்று வளர்ப்பு, மேய்ச்சல் நில மேம்பாடு, வாழ்வாதாரம் போன்றவை அடங்கும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813173
******
(Release ID: 1813343)
Visitor Counter : 273