தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு
Posted On:
04 APR 2022 3:34PM by PIB Chennai
இ-ஷ்ரம் இணையப்பக்கத்தில் 30.03.2022 நிலவரப்படி 27 கோடிக்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு.ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், பெண் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் அதிகரிப்பதற்காக மகளிர் தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள், தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்கள், மண்டல தொழில் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் அரசு அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறினார்.
ஆண் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தை பெண்களுக்கும் வழங்க வசதியாக சமஊதியச்சட்டம் 1976 தற்போது 2019 ஊதியங்கள் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பங்கேற்காமல் தடை செய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பணிகள் தவிர ஒரே வகையான வேலைக்கு ஆள்சேர்ப்பு நடக்கும்போது பாலின பாகுபாடு காட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813170
***************
(Release ID: 1813225)
Visitor Counter : 220