அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீடித்த சவாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு தொழில்துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் – டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
02 APR 2022 7:26PM by PIB Chennai
ஜம்முவில் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொழில்துறை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஸ்டார்ட் அப் துறையில் தொழில்துறை பங்கேற்பு என்ற நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உலகின் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா தலைமை வகிக்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.
இத்துறையில் ஜம்மு காஷ்மீர் பின்னடைவை சந்தித்திருப்பது சற்று வருத்தம் அளிப்பதாகக் கூறினார். 2015-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் இந்தியா. ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்த பிறகு நாடு முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் ஜம்மு காஷ்மீரில் இது போதிய வளர்ச்சியைப் பெறவில்லை.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற கூறிய அவர், 2014 ஆம் ஆண்டு 1,100 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 40,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812817
*****
(Release ID: 1812828)
Visitor Counter : 233