நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22-ல் சாதனை அளவாக உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக நிலக்கரி நிறுவனங்களுக்கு திரு பிரல்ஹாத் ஜோஷி பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2022 6:26PM by PIB Chennai

2021-22ஆம் நிதியாண்டில் நிலக்கரியை சாதனை அளவாக உற்பத்தி மற்றும் விநியோகம் செய்ததற்காக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிலக்கரி நிறுவனங்களை பாராட்டுவதாகவும், இந்தியாவின் எரிசக்தித் தேவையை தொடர்ந்து நிறைவேற்றுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 8.55 சதவீதம் அதிகரித்து 777.23 மில்லியன் டன்னாக இருந்தது. அதே நேரத்தில் நிலக்கரி விநியோகம் 18.43 சதவீதம் அதிகரித்து 818.04 மில்லியன் டன்னாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812788

------


(வெளியீட்டு அடையாள எண்: 1812821) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी