சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
முஸ்லீம் சமூகத்திற்கான தங்கும் வசதியுடன் கூடிய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சித் திட்டம் மும்பையின் நியூ பன்வெல்லில் தொடக்கம்
Posted On:
02 APR 2022 4:17PM by PIB Chennai
குடிமைப் பணிகள் மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கான தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சியை வழங்கும் அஞ்சுமான்-ஐ-இஸ்லாமின் மத்திய பணியாளர் தேர்வாணைய (யூபிஎஸ்சி) பயிற்சி நிறுவனத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் இன்று திறந்து வைத்தார்.
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தேர்வர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர்களின் வெற்றிக் கதைகளால் உந்துதல் பெற்றதாகும்.
அஞ்சுமன்-ஐ-இஸ்லாமின் நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, இந்திய அரசின் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய வக்ஃப் ஆணையம் நிதியுதவி வழங்குகிறது.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அமைச்சகத்தின் "பேக்அப் டு ப்ரில்லியன்ஸ்" கொள்கையால் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குடிமைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவதோடு மற்ற போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று வருகின்றனர் என்றார்.
மத்திய அரசு வேலைகளில் சிறுபான்மை சமூகத்தினரின் சதவீதம் 2014-க்கு முன் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது, தற்போது 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் பிரதமரின் விகாஸ் திட்டம், சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிக்கும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டை வழங்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812756
***************
(Release ID: 1812792)