கலாசாரத்துறை அமைச்சகம்
தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த கண்காட்சியை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பார்வையிட்டனர்.
Posted On:
01 APR 2022 5:01PM by PIB Chennai
ஹைதராபாத் என்டிஆர் அரங்கத்தில் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்த தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
2022 ஏப்ரல் 1 முதல் 3 வரை ராஷ்டிரிய சன்ஸ்கிருதி மஹோத்சவ் நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கும் ஹைதராபாத்தின் அன்றைய நிஜாமுக்கும் எதிராகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராளிகளின் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
நிஜாம் ஆட்சிக்கு எதிராகப் போராடிய குமுரம் பீம் போன்றவர்களின் பங்கு என்ன என்பதை ஆளுநரிடம் மத்திய அமைச்சர் விளக்கினார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருப்பொருள்களை உள்ளடக்கிய சுமார் 50 புகைப்படக் காட்சிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலும், வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்து, குறிப்பாக அதிகம் அறியப்படாத மாவீரர்களிடம் இருந்து, இன்றைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம் என்று அவர் கூறினார். என்டிஆர் அரங்கில் மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் நிகழ்ச்சியை மிகப் பெருமளவில் வெற்றியடையச் செய்யுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812365
***************
(Release ID: 1812554)
Visitor Counter : 186