வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் மூலம் ரூ.3,170 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2022 2:39PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கோவிட்-19 தொற்று சூழலால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க, பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் கடந்த 2020 ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்துகிறது.

ஒராண்டு காலத்துக்கு உத்திரவாதம் இன்றி ரூ.10,000 வழங்கப்படும். இந்த கடனை முறையாக செலுத்தினால் அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.20,000 மற்றும் ரூ.50,000-ஆக கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது.

 முறையாக கடனை செலுத்தினால் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிமானியம் அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கெண்டால், ஆண்டுக்கு ரூ.1,200 திரும்பி அளிக்கப்படும்.

2022 மார்ச் 24ம் தேதி வரை, பிரதமரின் ஸ்வா நிதி திட்டத்தின் கீழ் 29.1 லட்சம் பேருக்கு ரூ.3,170 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,59,899 பேருக்கு ரூ.162 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811883

                                                                                **********************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1812125) வருகையாளர் எண்ணிக்கை : 480
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Manipuri