இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரு 112.07 கோடி வெளியீடு: திரு. அனுராக் தாகூர்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2022 5:40PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு  அமைச்சர் திரு. அனுராஜ் தாகூர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளின் விதிகள் இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு சட்டம் 2011-ன் விதிகளுக்கு அவை இணங்குதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றின் வருடாந்திர அங்கீகாரம் புதுப்பித்தல் செய்யப்படுகிறது.

இந்திய வில்வித்தை சங்கம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு, அகில இந்திய டென்னிஸ் சங்கம், இந்திய வுஷூ சங்கம், ஸ்குவாஷ் ரேக்கெட் கூட்டமைப்பு, இந்திய அமெச்சூர் சாப்ட் டென்னிஸ் கூட்டமைப்பு, குடோ இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அசோசியேஷன், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பு ஆகிய 10 கூட்டமைப்புகளின் அங்கீகாரம் புதுப்பித்தல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ 112.07 கோடி நிதியை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் பிற உள்நாட்டு போட்டிகளை சரியான நேரத்தில் நடத்துவது அந்தந்த தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பொறுப்பாகும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு எதுவும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக எந்தவித  வழக்கையும் தாக்கல் செய்யவில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812011

                           **********************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1812119) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी