சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை
Posted On:
31 MAR 2022 12:55PM by PIB Chennai
தங்க நாற்கர சாலையின் டெல்லி-மும்பை, மும்பை-சென்னை, சென்னை-கொல்கத்தா, கொல்கத்தா-ஆக்ரா மற்றும் ஆக்ரா-டெல்லி இடையே அடையாளம் காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள், மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் உட்பட சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை வசதியை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் NHAI திட்டமிட்டுள்ளது. இதன்படி (NH) நெடுஞ்சாலைகளில் விபத்தினால் ஏற்படும் உடல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைக்காக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின்படி ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து நடந்த இடத்தை அடைந்ததில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணிநேரம் அல்லது தேவையான சிகிச்சை அளிப்பதில் இருந்து, எது முன்னதாக நடந்தாலும், 30,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் ஏல நடைமுறைகள் மற்றும் சேர்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, இதற்கான திட்ட அமலாக்கத்திற்குப் பின்னரே திட்டத்தின் வெற்றியை மதிப்பிட முடியும்.
தில்லி-மும்பை, மும்பை-சென்னை, சென்னை-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-டெல்லி ஆகிய தங்க நாற்கர பாதையின் நான்கு பகுதிகளிலும் ரொக்கமில்லா சிகிச்சை வசதியை அளிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது மத்திய சட்டத்தால் செயல்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் கடந்த 5 ஆண்டுகளாக காப்பீடு தொடர்புடைய நடவடிக்கைகள், மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் 85% -கும் குறையாத உரிமைகோரல் தீர்வு விகிதம் கொண்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டதன் பேரில், இத்திட்டம் பிற தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு .நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811831
************************
)
(Release ID: 1812116)