இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டு கலாச்சாரம் மற்றும் விளையாட்டு வளர்ச்சியில் டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களின் பங்கை அரசு அங்கீகரிக்கிறது: திரு. அனுராக் தாகூர்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2022 5:40PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு. அனுராஜ் தாகூர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
‘விளையாட்டு’ என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், விளையாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் பொறுப்பு முதன்மையாக மாநில/யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. அவர்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது.
இருப்பினும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாட்டில் விளையாட்டு வளர்ச்சிக்காக கேலோ இந்தியா திட்டம்; தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு உதவி; சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள்; தேசிய விளையாட்டு விருதுகள்; சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்; பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நல நிதி; தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி; மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு பயிற்சி மையங்களை நடத்துதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது.
விளையாட்டு கலாச்சாரம் மற்றும் விளையாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களின் பங்கை அரசு அங்கீகரிக்கிறது. அதன்படி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும், அனைத்து பங்குதாரர்களும் அணுகக்கூடிய தகவல்களை ஒழுங்கமைப்பதற்கும், மின்-ஆளுமை மற்றும் விளையாட்டுகளில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.
தேசிய விளையாட்டுக் களஞ்சிய அமைப்பு, கேலோ இந்தியா கைபேசி செயலி, கேலோ இந்தியா உடற்தகுதி செயலி, பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான வருடாந்திர நாட்காட்டி தளம் மற்றும் ஃபிட் இந்தியா செயலி மற்றும் இணையதளம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல தகவல் தொழில்நுட்ப திட்டங்கள் இந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812012
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1812095)
வருகையாளர் எண்ணிக்கை : 159