வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்: தமிழகத்தில் பயிற்சி பெற்றோர் விவரம்

Posted On: 31 MAR 2022 2:41PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு, கவுஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

நகர்ப்புற ஏழை குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பை குறைப்பதை தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற தொலைநோக்கு லட்சியத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - நகர்ப்புறம்     கீழ்   உதவியை வழங்குவதன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் துணை புரிகிறது.  இதுவரை அனுமதிக்கப்பட்ட 1.15 கோடி வீடுகளில், 56.3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2014 ஏப்ரல் 1 முதல் 2022 பிப்ரவரி 28 வரை 97067 சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, 60280 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு, 14409 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, 9754 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2014 ஏப்ரல் 1 முதல் 2022 பிப்ரவரி 28 வரை தனிநபர்/குழு குறு நிறுவனங்கள் அமைக்க 236303 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்பட்டு, சுய உதவிக்குழு-வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ் 61878 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811885

                                ******************

 

 

 



(Release ID: 1812092) Visitor Counter : 756


Read this release in: English , Urdu , Manipuri