பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யூபிஎஸ்சி தேர்வர்களுக்கு வயது தளர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2022 5:14PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக  விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது தொடர்பாக குடிமைத் தேர்வு விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

ரிட் மனுக்கள் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டு, முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பான தற்போதைய விதிகளை மாற்றுவது சாத்தியமாகவில்லை.

இது தொடர்பான மற்றொரு விவகாரத்தில் டாக்டர் ., ஜிதேந்திர சிங் கூறியதாவது: அப்ஜெக்டிவ் வகைத் தேர்வைப் பொறுத்தவரை தேர்வின் முழு செயல்முறைக்குப் பின்னரே பதில்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அதன் வருடாந்திர நாட்காட்டியைக் கடைப்பிடிப்பதற்காக நியாயமான காலக்கெடுவில் முடிவுகளை வெளியிடுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விடைத்தாள்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று யூபிஎஸ்சி மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811537

*************


(வெளியீட்டு அடையாள எண்: 1811662) வருகையாளர் எண்ணிக்கை : 263
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali