பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டம்

प्रविष्टि तिथि: 30 MAR 2022 2:43PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி. ஸ்ம்ரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை 2020-ம் ஆண்டு நிதி ஆயோக் ஆய்வு செய்தது.

மத்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டமான வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டம், 11 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.

முறையான பள்ளிக் கல்வியை அவர்கள் பெற உதவுவது, வாழ்க்கை திறன் பயிற்சிகள் வழங்குவது, பொது சேவைகளுக்கான அணுகலை பெண் குழந்தைகளுக்கு வழங்குவது உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

கல்வி உரிமை சட்டம் 2009 ல், 11 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகள் கல்வி கற்பதை கட்டாயமாக்கி இருப்பதோடு அவர்களது ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நோக்கில் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

11 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் 2009-ன் கீழ் பலன்களை பெறுவதால், வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. எனவே இதை கருத்தில் கொண்டு, வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டம் திருத்தப்பட்டு சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 என மாற்றப்பட்டது.

மேற்கண்ட திட்டத்தின் பயனாளிகள் ஆக 14 முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், 11 முதல் 14 வயது வரையிலான அனைத்து பெண்களும் முறையான பள்ளிக் கல்வியை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் கன்யா சிக்ஷா பர்வேஷ் உத்சவ் எனும் பிரச்சாரத்தை 2022 மார்ச் 7 அன்று இந்திய அரசு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811388

***************


(रिलीज़ आईडी: 1811631) आगंतुक पटल : 2114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu