உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

போபால் – சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 30 MAR 2022 11:49AM by PIB Chennai

போபால் – சென்னை இடையே நேரடி விமான சேவையை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்ய எம்.சிந்தியாவும் இணையமைச்சர் வி.கே.சிங்கும் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்வில், மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சவ்கான், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்தியப்பிரதேச மருத்துவக் கல்வி, போபால் விஷவாயு துயர சம்பவ நிவாரண மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் திரு.விஸ்வாஸ் சாரங், போபால் தொகுதி மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், சென்னை வடக்குத் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் வீராசாமி கலாநிதி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ராஜீவ் பன்சால் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

150 இருக்கைகள் கொண்ட ஏ320 பயணிகள் விமானம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்துடன் போபாலிலிருந்து தினந்தோறும் சராசரியாக 10 விமானங்கள் புறப்பட்டுச் செல்லும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.ஜோதிராதித்ய எம்.சிந்தியா, வளர்ச்சி, வணிகம், முன்னேற்றம் ஆகியவற்றின் மையமாக விளங்குகின்ற இந்தியாவின் இதயப் பகுதியையும் (போபால்) சமய உணர்வுகள் மிகுந்த இடத்தையும் (சென்னை) இணைத்திருக்கும் இந்த நாள் அதிர்ஷ்டவசமானது என்றார். ஏற்கனவே 5 நகரங்களுடன் இணைக்கப்பட்டிருந்த போபால் தற்போது பெங்களூரு, மும்பை, தில்லி, ஐதராபாத், புனே, பிரயாக்ராஜ், ஆக்ரா, அகமதாபாத், ராய்ப்பூர், சென்னை ஆகிய 10 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. போபாலிலிருந்து 94-ஆக இருந்த வாராந்திர விமான சேவைகள் 216 ஆக 150 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையப் பணிகள் குறித்து பேசிய திரு.சிந்தியா, இதற்காக 4 இடங்கள் மாநில அரசால் மத்திய அமைச்சகத்திற்கு ஆலோசனைகளாக வரப்பெற்றதாகவும் இவற்றிலிருந்து இரண்டு தெரிவு செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் வி.கே.சிங் பேசுகையில், இந்தப் பணியில் ஈடுபாடு காட்டிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், தமிழ்நாடு அரசு, மத்தியப்பிரதேச அரசு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக கூறினார். இந்த விமான சேவை பிராந்திய தொடர்பை விரிவுபடுத்துவது மட்டுமின்றி இரு நகரங்களுக்கு இடையே வர்த்தகம், வணிகம், சுற்றுலா ஆகியவற்றையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

விமான சேவையின் கால அட்டவணை:

வ.எண்.

புறப்பாடு

வருகை

விமானம்

நடைகள்

புறப்பாடு நேரம்

வருகை நேரம்

விமான வகை

1

சென்னை

போபால்

இண்டிகோ

3

17.25

19.35

ஏ320

2

போபால்

சென்னை

இண்டிகோ

3

20.05

22.40

ஏ320

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811254

******(Release ID: 1811330) Visitor Counter : 148