விவசாயத்துறை அமைச்சகம்
பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
29 MAR 2022 2:47PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் துணை திட்டமான பயிர் பல்வகைப்படுத்தல் திட்டத்தை, பசுமை புரட்சி மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2013-14ம் ஆண்டு முதல் வேளாண்துறை அமல்படுத்தி வருகிறது. தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் பயிர்க்கு மாற்றாக, பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், ஊட்டசத்சத்து மிக்க தானியங்கள், பருத்தி போன்றவற்றை பயிரிடுவதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மேலும், தோட்டக்கலை ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ், தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கும் மத்திய அரசு உதவி வருகிறது.
தேசிய வளர்ச்சி வேளாண் திட்டத்தின் கீழ், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப, பயிர் பல்வகைப்படுத்தல் முறையை பின்பற்றுவதற்கான வசதியையும் வழங்குகிறது. மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒப்புதல் குழு மூலம், பயிர் பல்வகைப்படுத்தல் திட்டத்தை மாநிலங்கள் ஊக்குவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810902
*********************
(Release ID: 1811098)
Visitor Counter : 251