விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் கண்காட்சி - 2020

Posted On: 29 MAR 2022 2:58PM by PIB Chennai

இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கும், உலக பொருளாதாரத்தில் கேந்திரமாக விளங்குவதற்கும் துபாய் கண்காட்சி-2020 பெரும் உதவிகரமாக  இருந்தது.  இந்திய அரங்கில் அமைக்கப்பட்ட இந்திய புதிய கண்டுபிடிப்பு பிரிவு நாட்டின் ஸ்டார்டப் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது. இது இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. எதிர்கால வர்த்தக வாய்ப்பை அமைப்பதற்கு அடித்தளமாக இக்கண்காட்சி அமைந்திருந்தது. உணவு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் வலிமைகளை இக்கண்காட்சி எடுத்துரைத்தது.

 தானியங்கள், தோட்டக்கலை, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் (மின்னணு வேளாண் மற்றும் ஸ்டார்டப்) உள்ளிட்ட துறைகள் ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. புதிய கூட்டு முயற்சியுடன் பல்வேறு நாடுகள் வர்த்தகம் புரிவதற்கு வழிவகையாக துபாய் கண்காட்சி நடத்தப்பட்டது. வேளாண் பிரிவில் பங்கேற்ற பல்வேறு நாடுகள் ஏற்றுமதி, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை கண்டறிவதற்கும், நட்புறவை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு கூட்டங்களை இக்கண்காட்சியில் நடத்தின. இந்தியாவின் சார்பில் மூத்த அதிகாரிகள் கொண்ட பிரதிநிதிகள் ஐக்கிய அரபு எமிரேட், மியான்மர், ஜிம்பாப்வே, வியாட்நாம், மொராக்கோ, இந்தோனேஷியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினர்.

மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இதனை தெரிவித்தார்.

***************


(Release ID: 1811029) Visitor Counter : 243


Read this release in: English , Urdu , Telugu