இடுகை இடப்பட்ட நாள்:
29 MAR 2022 12:46PM by PIB Chennai
கடந்த மூன்று வருடங்களில் கனரக மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதன்படி 2017-18-ம் ஆண்டில் 41,677 கோடி ரூபாய்க்கும், 2018-19-ல் 52,910 கோடி ரூபாய்க்கும், 2019-20-ல் 60,698 கோடி ரூபாய்க்கும், 2020-2021-ல் 63,839 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் சங்கம் அளித்த தகவலின்படி டர்பைன், ஜென்ரேட்டர்கள், சுழல் இயந்திரங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி கடந்த 3 வருடங்களாக அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மூலதன சரக்குகள் தொடர்பான உள்நாட்டு தயாரிப்புகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனினும் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி 2022 வரை காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 33 சதவீதம் அதிகமாகும். தொழிற்சாலை கொதிகலன்கள், பாகங்கள், மின் இயந்திரங்கள், அனைத்து வகையான பம்புகள், குளிர்சாதன மற்றும் குளிர்பதன இயந்திரங்கள் மற்றும் பாகங்கள், வாட்டர் ஹீட்டர்கள், பால்பண்ணை, விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், ஜவுளி உள்ளிட்ட தொழிற்சாலைக்கான இயந்திரங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மக்களவையில் இது குறித்த கேள்விக்கு கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு கிரஷண் பால் குர்ஜார் எழுத்து மூலம் பதிலளித்தார்.
***************