சுற்றுலா அமைச்சகம்

எல்லை பகுதிகளில் பல திட்டங்கள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கிறது சுற்றுலாத்துறை அமைச்சகம்

Posted On: 28 MAR 2022 3:58PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

எல்லை பகுதிகள் உட்பட நாட்டில் சுற்றுலாவை பல திட்டங்கள் மூலம் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஊக்குவிக்கிறது.  சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ்  எல்லை பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய ஏஜன்சிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.  விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.  மேலும் சுற்றுலாத்துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து, பிராந்திய இணைப்பு திட்டம் மூன்றாவது உதான் திட்டத்தின் கீழ் சுற்றுலா வழித்தடங்களை மேம்படுத்த நிதியுதவி அளிக்கிறது.

அதோடு, எல்லை மாவட்டங்களில் உள்ள சவால்கள், சுற்றுலா மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தடைகள் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளை  மாநில சுற்றுலாத்துறைகளுடன் இணைந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் போக்குகிறது.

தேசிய நீர்வழித்தடங்களில் 9 இடங்களில் படகுத்துறை அமைக்க ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அட்டாரி சோதனை  சாவடியில் சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எல்லை பகுதிகளில் சுற்றுலாத்துறை அடையாளம் கண்டுள்ள 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் எல்லைகள் ரோடு அமைப்பிடம் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810503

**************



(Release ID: 1810708) Visitor Counter : 155