சுற்றுலா அமைச்சகம்

சர்வதேச விமான போக்குவரத்து இன்று மீண்டும் தொடக்கம்: சுற்றுலாத்துறையினர் வரவேற்பு

Posted On: 27 MAR 2022 7:16PM by PIB Chennai

இரண்டாட்டு இடைவெளிக்குப்பின், சர்வதேச விமான போக்குவரத்தை இன்று மீண்டும் தொடங்க மத்திய அரசு எடுத்த முடிவை நாட்டில் உள்ள சுற்றலாத்துறையை சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, சர்வதேச விமானப் போக்குவரத்தை, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கடந்த 2020 மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தியது.

சிறப்பு விமானங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல், புதிய சுற்றுலா விசாக்களை மத்திய அரசு வழக்கத் தொடங்கியது.

இந்நிலையில் இயல்பான சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை சுற்றுலா நடத்துனர்கள் சங்கத் தலைவர் திரு ராஜீவ் மெஹ்ரா வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ மத்திய அரசின் இந்த முடிவு, சுற்றுலாக் காலத்தின் தொடக்கமான செப்டம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் தொழில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’’ என்றார்.

பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மீள, சுற்றுலா நடத்துனர்கள், ஏஜென்டுகள் மற்றும் வழிகாட்டிகளுக்கு கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் நிதி உதவியை சுற்றுலாத்துறை அமைச்சகம் வழங்குகிறது.

************

 



(Release ID: 1810303) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi