பாதுகாப்பு அமைச்சகம்
மணாலி-சர்ச்சு சாலை சாதனை அளவான மிகக்குறுகிய காலத்தில் திறக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
26 MAR 2022 5:42PM by PIB Chennai
வடமேற்கு எல்லைப்பகுதியில் இமாச்சலப் பிரதேசத்தின் ஒன்றாவது தேசிய நெடுஞ்சாலையில் மணாலி-சர்ச்சு இடையிலான 210 கி.மீ நீள சாலையை எல்லைச் சாலை அமைப்பு ( பிஆர்ஓ) இன்று திறந்து வைத்துள்ளது. இந்தச்சாலை இமாச்சலப்பிரதேசத்தின் லகாவுல் மாவட்டத்தை இணைப்பதுடன், லடாக்கில் உள்ள லே வரை நீளுகிறது.
இந்தச்சாலைகள் பொதுவாக ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு சாலைகள் மற்றும் கணவாய்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மார்ச் மாதத்திலேயே திறக்கப்படுகின்றன.
இந்தச்சாலைகள் ஆண்டில் 160 முதல் 180 நாட்கள் மூடப்பட்டிருக்கும். இம்முறை 117 நாட்களிலேயே இவற்றை பிஆர்ஓ திறந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும், முன்னதாகவே சாலைகள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 29-ம்தேதி சாலை மூடப்பட்டது.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810011
***********************
(रिलीज़ आईडी: 1810050)
आगंतुक पटल : 188