அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சிக்காக தொழில் துறை சமமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
26 MAR 2022 6:29PM by PIB Chennai
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சிக்காக தொழில் துறை சமமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார். மூக்கு வழியே செலுத்தும் கோவிட் 19-க்கான தடுப்பு மருந்து, மலேரியா தடுப்பு மருந்துகளின் வணிக ரீதியான உற்பத்திக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஹைதராபாதின் சபிஜென் பயோலாஜிக்ஸ் நிறுவனம் இடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் டாக்டர் கிருஷ்ணா எல்லா தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருதரப்பிலும் தலா 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய இதில் வகை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சிக்காக தொழில் துறை சமமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்வதாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் மருந்து உற்பத்தித் துறை, தொழில்துறை, கல்வித்துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டது என்றும். இந்த கூட்டு முயற்சியின் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810027
***************
(Release ID: 1810042)
Visitor Counter : 164