பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சி

Posted On: 25 MAR 2022 2:21PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) அதன் டிஆர்டிஓ தொழில் மற்றும் கல்வித்துறை உயர்சிறப்பு மையத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்கு நிதியளிக்கிறது.

ஆயுதப் படைகளின் எதிர்காலத் தேவைகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான முக்கியமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 10 சிறப்பு மையங்களை டிஆர்டிஓ நிறுவியுள்ளது.

வான்வழி, ஆயுதங்கள், கடற்படை மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக பல்வேறு மானிய உதவித் திட்டங்களின் கீழ் ஆராய்ச்சிக்கு டிஆர்டிஓ நிதியளிக்கிறது.

 

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் மையம் (சிஏஐஆர்), பெங்களூரு மற்றும் டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் ஆய்வகம், பெங்களூரு ஆகிய இரண்டு பிரத்யேக ஆய்வகங்களையும் டிஆர்டிஓ கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809581

                           ************************


(Release ID: 1809830) Visitor Counter : 169
Read this release in: English , Urdu