பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கிய பயோ கழிவறைகள்
Posted On:
25 MAR 2022 2:13PM by PIB Chennai
மக்களவையில் பயோ கழிவறைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கிய பயோ-கழிவறைகளின் முக்கிய அம்சங்கள்:
பயோ கழிவறைகள் அன்ஏராபிக் என்ற ஆக்ஸிஜன் இல்லா நடைமுறையை பயன்படுத்தி பாக்டீரியா மூலம் கழிவுகளை அழிக்கின்றன.
பலவித காலநிலைகளில் பயன்படுத்தும் வகையில், பல வடிவமைப்புகளில் பயோ-கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாக்டீரியா செறிவூட்டலுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா தொகுப்பில், நான்குவிதமான பாக்டீரியா தொகுப்புகள் உள்ளன.
ஹைட்ரோலேஸ்
அசிடோஜெனேஸ்
அகிடோஜெனேஸ்
மெதோஜென்ஸ்
நாடு முழுவதும் 60 தொழிற்சாலைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் நாடு முழுவதும் பயோ கழிவறைகளை அமைத்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மொத்தம் 16,000 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய ரயில் பெட்டிகளில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயோ கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தினசரி அடிப்படையில் 100 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809572
*********************
(Release ID: 1809828)
Visitor Counter : 125