கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய நீர்வழிகளில் சரக்கு போக்குவரத்து
प्रविष्टि तिथि:
25 MAR 2022 12:14PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
கடல்சார் இந்தியா லட்சியம் 2030-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2030-ம் ஆண்டுக்குள் தேசிய நீர்வழிகளில் 200 மில்லியன் மெட்ரிக் டன்னை அடைய, 2024-25-ம் ஆண்டில் 120 எம்எம்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கங்கை நதியின் ஹால்டியா-வாரணாசி பகுதியில் உள்ள தேசிய நீர்வழி-1-ன் வழிசெலுத்தல் திறனை அதிகரிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தால் உலக வங்கி உதவியுடன்
நீர் வழி மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய நீர்வழி-2-ன் விரிவான மேம்பாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனி திட்டத்தின் கீழ் ரூ. 461 கோடி செலவில் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஜோகிகோபாவில் பல்முனை முனையக் கட்டுமானம், பாண்டு துறைமுகத்திற்கு மாற்றுச் சாலை இணைப்பு, பாண்டுவில் கப்பல் பழுதுபார்க்கும் வசதி, ஃபேர்வே மேம்பாடு, நிலையான மற்றும் மிதக்கும் முனையங்கள், இணையதள பராமரிப்பு போன்றவை இந்தத் திட்டத்தில் அடங்கும்
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809524
**********************
(रिलीज़ आईडी: 1809821)
आगंतुक पटल : 195