சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்
प्रविष्टि तिथि:
24 MAR 2022 4:35PM by PIB Chennai
நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளின் சதவீதம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மக்களவைக்கு நடைபெற்ற கடந்த 5 தேர்தல்களில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் சதவீதம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 4,648 வேட்பாளர்களில் 284 பேர் பெண் வேட்பாளர்கள் என்றும் இது மொத்த உறுப்பினர்களில் 6.1 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 49 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்றும், இது மொத்த உறுப்பினர்களில் 9.0 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 8,054 வேட்பாளர்களில் 726 பேர் பெண் வேட்பாளர்கள் என்றும் இது மொத்த வேட்பாளர்களில் 9.0 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்றும், இது மொத்த உறுப்பினர்களில் 14.4 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மாநிலங்களவை பிரதிநிதிகளில் 24 பேர் பெண் உறுப்பினர்கள் என்றும், இது மொத்த உறுப்பினர்களில் 9.8 சதவீதம் கூறப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மாநிலங்களவை பிரதிநிதிகளில் 29 பேர் பெண் உறுப்பினர்கள் என்றும், இது மொத்த உறுப்பினர்களில் 12.24 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 10.33 சதவீதம் பேர் பெண் வேட்பாளர்கள் என்றும், மொத்த தொகுதிகளில் 5.13 சதவீத தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809217
***************
(रिलीज़ आईडी: 1809370)
आगंतुक पटल : 324