சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழலின் மீது கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாசு குறைவு

प्रविष्टि तिथि: 24 MAR 2022 2:43PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே-யால் கீழ்காணும் தகவல் மாநிலங்களவையில் இன்று வழங்கப்பட்டது.

கொவிட்-19-க்கு எதிராக ‘முழு அரசு மற்றும் ‘முழு சமூகம் அணுகுமுறையை இந்தியா பின்பற்றியதோடு, நாட்டின் பொதுச் சுகாதார எதிர்வினையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கொவிட்-19-ன் தாக்கத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குறைக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இயற்கை, பருவநிலை மற்றும் ‘விலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்கும் ஒரு-சுகாதார அணுகுமுறை ஆகியவை இந்தியாவின் கொவிட்-19-க்குப் பிந்தைய மீட்பு மற்றும் ‘தற்சார்பு இந்தியா யுக்தியின் மையமாக உள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 19 முக்கிய நதிகளின் நீரின் தரக் கண்காணிப்பு, ஊரடங்கு காலத்தில் நாட்டில் நதி நீரின் தரத்தில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டியது. கரிம மாசுபாடு குறைப்பு, மேற்பரப்பு நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பு ஆகியவை காணப்பட்டன. அதேசமயம், மல மாசு அளவுகள் அப்படியே இருந்தன.

 

இதேபோல், பல நகரங்களில் தொழிற்சாலைகள் மூடல், வாகனங்கள் இயக்கம் குறைதல், கட்டுமானப் பணிகள் இல்லாமை மற்றும் மனித நடவடிக்கைகள் இல்லாததால் காற்றின் தரத்தில் தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டது.

தில்லி, ஃபரிதாபாத், குருகிராம், காசியாபாத், நொய்டா, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, பாட்னா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சராசரியாக பிஎம்2.5, பிஎம்10, எஸ்ஓ2 மற்றும் என்ஓ2 ஆகியவற்றின் செறிவுகள் குறைந்ததைத் தொடர்ச்சியான சுற்றுப்புறkn காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவு வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் முக்கிய அமைச்சகமான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும், இயற்கை வளங்களை நிர்வகிப்பதற்கும் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்புகளை உறுதி செய்கிறது

கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலின் போது உருவாகும் கழிவுகளைக் கையாளுதல், சுத்திகரிப்பு மற்றும் அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் கொவிட்-19 தொடர்பான கழிவுகளின் பாதுகாப்பான மேலாண்மைக்கான விரிவான நடவடிக்கைகளை வழங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809130

***********


(रिलीज़ आईडी: 1809309) आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri , Bengali