பாதுகாப்பு அமைச்சகம்
உஸ்பெகிஸ்தான் ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிக்கு இந்திய ராணுவ படைப்பிரிவு உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக் சென்றது
Posted On:
22 MAR 2022 4:36PM by PIB Chennai
இந்தியா – உஸ்பெகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான மூன்றாவது கூட்டுப் பயிற்சி 2022 மார்ச் 22 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இந்திய ராணுவத்தின் குண்டுவீசும் படைப்பிரிவை உள்ளடக்கிய வீரர்கள் பயிற்சிக்கான இடத்திற்கு 2022 மார்ச் 22 அன்று புறப்பட்டுச் சென்றனர். இந்தப் படைப்பிரிவு உஸ்பெகிஸ்தான் ராணுவத்தின் வடமேற்கு ராணுவ மாவட்டத்தின் படைப்பிரிவுகளுடன் பயிற்சியில் இணையும். இத்தகைய பயிற்சி 2021 மார்ச் மாதம் உத்தராகண்டில் உள்ள ரானிகெட்டில் நடைபெற்றது.
சிறு நகர பகுதியில் ஐ.நா. விதிமுறைகளின்படி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். தொடக்கத்தில் இரு தரப்பினரும் நடைமுறை உத்தி நிலையிலான பயிற்சிகளை பகிர்ந்து கொள்வதும், பின்னர் சிறந்த நடைமுறைகளை கற்றறிவதும் இந்தப் பயிற்சியின் கால அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. இரு ராணுவங்களுக்கு இடையே புரிதலை விரிவாக்குதல், ஒத்துழைப்பு, இயங்கும்தன்மை ஆகியவற்றை இந்தப் பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808215
****
(Release ID: 1808319)