ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உரங்கள் மீதான மானியம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2022 3:58PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த இரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு பக்வந்த் கூபா, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சட்டப்படி அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுகிறது. 45 கிலோ யூரியாவின் எம்ஆர்பி ஒரு மூட்டைக்கு ரூ. 42 (வேம்பு பூச்சுக்கான கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் தவிர).
யூரியா உற்பத்தியாளர்/இறக்குமதியாளர்களுக்கு இந்திய அரசால் மானியம் வழங்கப்படுவதால் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் யூரியா வழங்கப்படுகிறது.
மேலும், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கொள்கையை அரசு செயல்படுத்தியுள்ளது.
இக்கொள்கையின் கீழ் ஒரு நிலையான அளவு மானியம் வருடாந்தர அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, மானியத்துடன் கூடிய உரங்களுக்கு அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த உரங்களை வாங்கும் ஏழை, குறு விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் மானியத்தால் பயனடைகின்றனர்.
பெங்களூருவில் உள்ள வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புற உருமாற்ற மையம் தயாரித்த இறுதி அறிக்கையின்படி, வேம்பு பூசப்பட்ட உரத்தால் மண்ணின் தரத்தில் முன்னேற்றம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை செலவு குறைவு, பயிர்களின் விளைச்சல் மற்றும் அவற்றின் துணைப் பொருட்களில் முன்னேற்றம். உள்ளிட்ட நன்மைகள் ஏற்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808186
*************
(வெளியீட்டு அடையாள எண்: 1808310)
வருகையாளர் எண்ணிக்கை : 336