சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு ஆதரவிலான கல்வி உதவித் தொகை திட்டங்கள்
प्रविष्टि तिथि:
22 MAR 2022 4:30PM by PIB Chennai
நாட்டில் உள்ள ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு ஆதரவிலான இரண்டு கல்வி உதவித் தொகை திட்டங்களை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்துகிறது.
ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு மெட்ரிக் கல்விக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்கள் அமலாக்கப்படுகின்றன.
பெற்றோர்களின் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் உட்பட திருப்பித் தரப்படாத கட்டணங்கள் 11 ஆம் வகுப்புக்கு பிந்தைய படிப்புக்கான கல்விச் செலவு ஆகியவை மெட்ரிக் கல்விக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்தில் வழங்கப்படுகிறது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808208
------
(रिलीज़ आईडी: 1808288)
आगंतुक पटल : 173