கனரகத் தொழில்கள் அமைச்சகம்

ஃபேம் இந்தியா 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 22 MAR 2022 2:15PM by PIB Chennai

ஃபேம் இந்தியா 2-ம் கட்ட திட்டத்தின் கீழ்  25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் மின்சார வாகனங்களுக்காக 2,877 மின்னேற்றி நிலையங்களை அமைப்பதற்கு கனரகத்  தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  மேலும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும், கனரக வாகனங்களுக்காக குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.  நகரங்களில் குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.

ஃபேம் இந்தியா முதல் கட்ட திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்காக 520 மின்னேற்றி நிலையம் அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808115

 

*******



(Release ID: 1808197) Visitor Counter : 177