சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதிபதிகள் நியமனம் குறித்த அரசின் நிலைப்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAR 2022 2:47PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜியம் முறைக்கு பதிலாகமிகவும் பரந்த அடிப்படையிலானவெளிப்படையானபொறுப்பு வாய்ந்த நியமனச் செயல்முறையைக் கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு (தொண்ணூற்று ஒன்பதாவது திருத்தம்) சட்டம், 2014 மற்றும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம், 2014-ஐ 13.04.2015 முதல் அரசு செயல்படுத்தியது.

ஆனால்இந்த இரண்டு சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இரண்டு சட்டங்களையும் அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் செல்லாது என்று 16.10.2015 தேதியிட்ட உச்சச் நீதிமன்றத் தீர்ப்பு அறிவித்தது. அரசியலமைப்பு (தொண்ணூற்று ஒன்பதாவது திருத்தம்) சட்டம், 2014 அமலாக்கப்படுவதற்கு முன்பு இருந்த கொலீஜியம் அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்துதகுதி அளவுகோல்வெளிப்படைத்தன்மைசெயலகத்தை நிறுவுதல் மற்றும் புகார்களைக் கையாள்வதற்கான வழிமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுஉச்ச நீதிமன்ற கொலீஜியத்துடன் கலந்தாலோசித்துதற்போதுள்ள செயல்முறை விதிகளை (MoP) இறுதி செய்யுமாறு 16.12.2015 தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு அரசுக்கு உத்தரவிட்டது.

தற்போதுள்ள செயல்முறை விதிகள் மற்றும் வரைவுச் செயல்முறை விதிகள் ஆகியவற்றில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை 22.03.2016 தேதியிட்ட கடிதத்தின் மூலம் மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு இந்திய அரசு உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு அனுப்பியது. தலைமை நீதிபதியின் பதில் 25.05.2016 மற்றும் 01.07.2016 ஆகிய தேதிகளில் பெறப்பட்டது.

அரசின் கருத்துகள் 03.08.2016 அன்று தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் செயல்முறை விதிகள் மீதான உள்ளீடுகள்இந்தியத் தலைமை நீதிபதியிடமிருந்து 13.03.2017 தேதியிட்ட கடிதத்தின் மூலம் பெறப்பட்டன. 11.07.2017 தேதியிட்ட கடிதத்தில் அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்ற தலைமைச் செயலாளருக்கு நீதித்துறை தெரிவித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்துடன் கலந்தாலோசித்து அரசால் செயல்முறை விதிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807610

                                                ***********************


(வெளியீட்டு அடையாள எண்: 1807806) வருகையாளர் எண்ணிக்கை : 533
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi