பாதுகாப்பு அமைச்சகம்
பெண் அதிகாரிகளை பணியமர்த்துதல்
Posted On:
21 MAR 2022 2:43PM by PIB Chennai
பெண் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான விவரம்: இந்திய ராணுவம்
1. அதிகாரிகள்: அதிகாரிகள் நிலையிலான பணியமர்த்துதல் ஏதுமில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் 60 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
2. இளநிலைக் கமிஷன் அதிகாரிகள் / மற்ற பிரிவுகள்: ராணுவம் / காவல்துறையில் பெண்களுக்கான 300 காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2019-20 ஆம் ஆண்டில் 101 காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டு, உரிய பயிற்சிக்குப் பிறகு 100 பேர் நியமிக்கப்பட்டனர்.
2020-21 ஆம் ஆண்டில் 99 காலிப் பணியிடங்களும், 2021-22 ஆம் ஆண்டில் 100 காலிப் பணியிடங்களும் வெளியிடப்பட்டன. எனினும், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, அவை நிரப்பப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807609
***************
(Release ID: 1807756)