வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

சாலையோர வணிகர்களுக்கு பிணையில்லா கடன் தரும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பயனடைந்தோர் விவரம்

Posted On: 21 MAR 2022 1:28PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர் கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

கொவிட் சமயத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்காக, பிணையில்லாத பணி மூலதனக் கடனை எளிதாக்குவதற்காக, ஜூன் 01, 2020 முதல் பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதியை (பிரதமரின் ஸ்வநிதி திட்டம்) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

15.03.2022 நிலவரப்படி, ரூ 3,119 கோடி கடன்கள் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. 15.03.2022 நிலவரப்படி, 28.8 கோடி சாலையோர வியாபாரிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு வங்கிகள் மூலம் ரூ 16,105.74 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 3,41,298 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டத்தில் 3,636 விண்ணப்பங்களும் பெறப்பட்டு. முதல் கட்டத்தில் 1,92,433 விண்ணப்பங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 2,300 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் 1,59,065 கடன்களும், இரண்டாம் கட்டத்தில் 1,895 கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதியின் (பிரதமரின் ஸ்வநிதி திட்டம்) கீழ் தமிழகத்தில் மட்டும்    1,59,065 பேர் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807574

 



(Release ID: 1807747) Visitor Counter : 333