எஃகுத்துறை அமைச்சகம்
40 மில்லியன் டன்கள் இரும்புத்தாது உற்பத்தி செய்து வரலாறு படைத்தது தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி)
Posted On:
19 MAR 2022 6:53PM by PIB Chennai
மத்திய எஃகுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) ஒராண்டில் 40 மில்லியன் டன்களுக்கு மேல் இரும்புத் தாதை உற்பத்தி செய்த நாட்டின் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த 1960ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து, தற்போது 40 மில்லியன் டன் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.
உள்நாட்டில் இரும்புத் தாதுவின் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால், என்எம்டிசி நிறுவனமும், தனது லட்சியத் திட்டங்களை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
சமீபகாலமாக என்எம்டிசி நிறுவனம், நவீனத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
ஆண்டுக்கு 40 மில்லியன் டன் இரும்புத்தாது உற்பத்தி என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக என்எம்டிசி குழுவினரை, அதன் தலைவர் திரு சுமித் தேவ் பாராட்டினார். இந்த சாதனையுடன், 2030ம் ஆண்டுக்குள், 100 மில்லியன் டன் உற்பத்தி என்பதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் எனவும் திரு சுமித் தேவ் கூறினார்.
நிலக்கரி, வைரம், தங்கம் மற்றும் இதர முக்கியக் கனிமங்களின் உற்பத்தியிலும் ஈடுபடுவதற்கு, தங்களது நிபுணத்துவத்தை அதிகரிக்கவும், என்எம்டிசி திட்டமிட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1807309
************
(Release ID: 1807330)
Visitor Counter : 268