பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைகள் இடையே ஊட்டச்சத்து குறைபாடு விவரம்: மாநிலங்களவையில் தகவல்
Posted On:
16 MAR 2022 4:48PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி அளித்த பதிலில் கூறியதாவது:
ஐந்து வயதுக்கு உட்பட்ட எடை குறைவான, உட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கை விவரங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்தும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் இருந்து பெறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டசத்து அளவு கடந்த 2015-16ம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு 38.4 சதவீதத்திலிருந்து 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்பு 21 சதவீதத்திலிருந்து 19.3 சதவீதமாகவும், எடை குறைவு 35.8 சதவீதத்திலிருந்து 32.1 சதவீதமாக குறைந்துள்ளது.
நாட்டில் உள்ள குழந்தைகள் இடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் பாதிப்பு, எடை குறைவு குறித்த மாநிலம் வாரியான விவரங்கள் இணைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கைப்படி, தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வளர்ச்சி குறைபாடு 25 சதவீதமாகவும், நோய் பாதிப்பு 14.6 சதவீதமாகவும், எடை குறைவு 22 சதவீதமாகவும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806601
********************
(Release ID: 1806771)
Visitor Counter : 300