ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் பெட்டிகளுக்கு அலுமினியத்தைப் பயன்படுத்துதல்

प्रविष्टि तिथि: 16 MAR 2022 5:11PM by PIB Chennai

இந்திய ரயில்வே அலுமினிய ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்வது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  1. ரேபரேலி மாடர்ன் ரயில்பெட்டித் தொழிற்சாலை, தென்கொரியாவின் டாவோன்சிஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அலுமினிய பயணிகள் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து சோதனை செய்வதற்கு இந்த ஒப்பந்தம்  வகை செய்கிறது.
  2. இந்திய ரயில்வே  400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில் தொகுதிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் எரிசக்தித் திறன் கொண்டவையாகவும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிப்பவையாகவும் இருக்கும். இந்த ரயில்களில் அலுமினியம் பெட்டிகளை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
  3. மும்பை-அகமதாபாத் அதி விரைவு ரயிலுக்கும் அலுமினிய ரயில்பெட்டிகள்  இணைக்கப்படும் வகையில், அவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்தார்.

-----


(रिलीज़ आईडी: 1806731) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu