ரெயில்வே அமைச்சகம்
2022 பிப்ரவரியில் ரயில்வே பாதுகாப்புப் படையின் செயல்பாடுகள்
Posted On:
16 MAR 2022 1:45PM by PIB Chennai
நாடு மற்றும் அதன் மக்களின் சேவையில் ரயில்வே பாதுகாப்புப் படையின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு, எச்சரிக்கை மற்றும் சேவை ஆகிய மூன்று வார்த்தைகளில் சுருக்கமாக விவரிக்கலாம். ரயில்வே சொத்து, பயணிகள் மற்றும் தொடர்புடைய விஷயங்களின் பாதுகாப்பு பொறுப்பை ரயில்வே பாதுகாப்புப் படை கவனிக்கிறது. உதவி தேவைப்படும் பயணிகளுக்கு உதவுவதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுப்பதிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இதர உயிர்களைக் காப்பாற்றுவதில் சிறப்பான கடமை ஆற்றுகிறார்கள். ஓடும் ரயிலில் ஏற/இறங்க முயலும் பயணிகள் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
"ஜீவன் ரக்ஷா" திட்டத்தின் கீழ், ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பிப்ரவரி 2022-ல் 62 (35 ஆண்கள் + 27 பெண்கள்) பேரையும் மற்றும் 2022-ல் இது வரை 114 உயிர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து தொலைந்து போன/பிரிந்து செல்லும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீட்கும் உன்னதமான பணியை ஆர்பிஎஃப் மேற்கொள்கிறது. சுரண்டுபவர்களின் கைகளில் குழந்தைகள் சிக்கும் முன் அவர்களைப் பாதுகாப்பதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையினர் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக “ஆபரேஷன் நன்ஹே ஃபாரிஸ்டே” எனும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022-ல், பாதுகாப்பு தேவைப்படும் 1156 குழந்தைகள் (787 சிறுவர்கள் + 369 சிறுமிகள்) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டனர். 2022-ல் 1488 சிறுவர்களையும், 713 சிறுமிகளையும் (மொத்தம் 2201 சிறார்களை) ஆர்பிஎஃப் மீட்டெடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806497
*****
(Release ID: 1806651)
Visitor Counter : 212