ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் தொழிலின் கைத்தறி பிரிவில் 25,46,285 பெண்கள் பணிபுரிகிறார்கள்: மக்களவையில் தகவல்
प्रविष्टि तिथि:
16 MAR 2022 3:25PM by PIB Chennai
2019-20 கைத்தறி தொழிலாளர்கள் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 35,22,512 பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் 25,46,285 பேர் பெண்கள். மொத்த கைத்தறி தொழிலாளர்களில் பெண்களின் பங்கு 72.29 சதவீதமாக உள்ளது.
இவர்களில் அதிகபட்சமாக அசாமில் 11,79,507 பெண் தொழிலாளர்கள் கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 549 பெண்களும், புதுச்சேரியில் 1,083 பெண்களும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கைவினைக் கலைஞர்களாக மொத்தம் 16,87,534 பெண்கள் கைவினைக் கலைஞர்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 46,995 பேர்; புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 4,925 பேர்.
உலகளாவிய ஜவுளிச் சந்தையில் வலுவான இடத்தைப் பெறுவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் இந்தத் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை திட்டம் இந்தத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திறன் கொண்டது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி.தர்ஷனா ஜர்தோஷ் இந்த தகவல்களை தெரிவித்தார்.
***************
(रिलीज़ आईडी: 1806645)
आगंतुक पटल : 301