சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2022 1:20PM by PIB Chennai
மத்திய அரசு சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அதிக அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிவதற்கான சுற்றறிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 28.10.2015 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி சாலை விபத்து நடைபெறும் இடத்தைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக 5 சாலை விபத்துக்கள் அல்லது பத்து உயிரிழப்புகள் நடந்த இடங்களில் 500 ம மீட்டர் நீளத்திற்கு கருப்பு இடமாகக் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் காவல்துறை சாலை விபத்துக்கள் குறித்து சேகரித்துள்ள தரவுகளின் அடிப்படையில், அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு, இவற்றைத் தொகுத்துள்ளது. சாலை விபத்துக்களைக் குறைக்கவும், நிரந்தர தீர்வு காணவும் நீண்ட கால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
------