சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழப்பு

Posted On: 16 MAR 2022 1:22PM by PIB Chennai

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் தேசிய அளவில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் அதே போல விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்திருப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு 4,67,044 விபத்துக்கள் நடந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அது 3,66,138 ஆக குறைந்துள்ளது. அதே போல 2018-ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1,51,417 பேர் உயிரிழந்தனர்.   2020ஆம் ஆண்டு 1,31,714 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்துக்கள் குறித்து மாநில வாரியாக பட்டியலை அவர் வெளியிட்டார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 விபத்துக்கள்  நடந்துள்ளன. அதில் 8,059 பேர் உயிரிழந்துள்ளனர். 50,551 பேர் காயமடைந்துள்ளனர்.  புதுச்சேரியைப் பொறுத்தவரை 969 விபத்துக்களில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். 1,019 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இது குறைவு தான் என்றார்.

கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806486

------



(Release ID: 1806544) Visitor Counter : 158


Read this release in: English , Bengali , Manipuri