சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இட ஒதுக்கீட்டு கொள்கை

Posted On: 15 MAR 2022 3:59PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திருமிகு. பிரதிமா பவுமிக் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.  

1992-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இந்திரா சாவ்னி வழக்கில்  அரசியலமைப்பின் பிரிவுகள் 15(4) மற்றும் 16(4)-ன் கீழ் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்படுத்தப் பிரிவினருக்கு வழங்கப்படும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இல்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் 103-வது திருத்தச் சட்டம் 2019-ன் படி 15(6) மற்றும் 16(6) விதிகளின் கீழ் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பிரிவுகள் 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மீதான 50 சதவீத வரம்பை மீறாது.

பிரிவுகள் 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடும், 15(6) மற்றும் 16(6) விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடும் வெவ்வேறாகும். சட்டப்படி இவை பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806158

************


(Release ID: 1806334) Visitor Counter : 291


Read this release in: English , Urdu , Malayalam